CanadaWorldSRI LANKAIndia
Breaking NewsTraffic incident on Highway 401 westbound causing major delays. Emergency services on scene.

Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

இலங்கையில் தீவிரமடையும் மனித - யானை மோதல்: நான்கு மாதங்களில் 143 உயிர்கள் பலி
Sri Lanka

இலங்கையில் தீவிரமடையும் மனித - யானை மோதல்: நான்கு மாதங்களில் 143 உயிர்கள் பலி

By MadushanApril 30, 2026

இலங்கையில் மனித - யானை மோதல் தற்பொழுது பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே இந்த மோதல்களினால் மனிதர்கள் மற்றும் யானைகள் என மொத்தம் 143 உயிர்கள் பறிபோயுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இவ்வளவு பெரிய அளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 108 யானைகள் உயிரிழந்துள்ளன. அதேவேளை, காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி 35 மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. யானைகளின் மரணங்களுக்கான பின்னணியை ஆராயும்போது, அவை மனிதத் தலையீடுகளாலேயே அதிகளவில் நிகழ்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 16 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினாலும், சட்டவிரோத மின்சார வேலிகளில் சிக்கி 14 யானைகளும் உயிரிழந்துள்ளன.

மேலும், உணவுப் பொருட்களில் மறைத்து வைக்கப்படும் வெடிபொருட்களை (ஹக்கபட்டா) உட்கொண்டதால் 09 யானைகளும், புகையிரத மோதல்கள் காரணமாக 05 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஏனைய மரணங்கள் இயற்கை காரணங்களினாலோ அல்லது இதுவரை இனம் காணப்படாத காரணங்களினாலோ ஏற்பட்டுள்ளன. இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில், உயிரிழந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் குட்டிகள் என்பதாகும். அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான யானை இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தொடர்ச்சியான உயிரிழப்புகள் சூழலியல் சமநிலையைப் பாதிப்பதுடன், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. எனவே, இந்த மோதலைக் கட்டுப்படுத்தவும், எஞ்சியுள்ள யானை வளத்தைப் பாதுகாக்கவும், மனித உயிர்களை உறுதிப்படுத்தவும் முறையான மற்றும் விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டங்களை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனச் சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio