Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

'நோவா' அறிவியல் புனைக்கதைத் திரைப்படம்: ஆக்‌ஷன் த்ரில்லரில் முதல் முறையாகக் களமிறங்கும் ரைசா வில்சன்!
Entertainment

'நோவா' அறிவியல் புனைக்கதைத் திரைப்படம்: ஆக்‌ஷன் த்ரில்லரில் முதல் முறையாகக் களமிறங்கும் ரைசா வில்சன்!

By MadushanJune 9, 2026

பிரபல நடிகை ரைசா வில்சன் முதல் முறையாக முழு நீள அறிவியல் புனைக்கதை (சயின்ஸ் ஃபிக்‌ஷன்) த்ரில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 'நோவா: பேஸ் ஒன் - தி அரைவல்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், 'ஆண்மை தவறேல்' புகழ் துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், சுவாத்திகா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளம்பரப் பட இயக்குநரான மிலோ, இப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படம் குறித்து நடிகை ரைசா வில்சன் கூறுகையில், “கதைக்குள் ஒரு கதை சொல்லும் புதுமையான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. இதில் நான் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் அறிவியல் புனைக்கதை என மூன்று அம்சங்களும் கலந்து, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்” என்றார்.

மேலும், “எனது திரைப்பயணத்தில் இது ஒரு முற்றிலும் மாறுபட்ட முயற்சி. கேரளாவின் மறையூர் வனப்பகுதியில் உள்ள சந்தன மரக் காடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. அனுமதி பெறுவதற்கே மிகவும் சவாலாக இருந்த அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் கடினமான சூழல்களுக்கு மத்தியில் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் சில ஆக்‌ஷன் காட்சிகளிலும் நான் நடித்துள்ளேன், இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio